குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் திக்கணங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நேற்று விலையில்லா சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் குமார், தக்கலை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகேஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.