பறிமுதல் செய்த மணல் லாரியை விடுவிக்க மனு.ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்

பறிமுதல் செய்த மணல் லாரியை விடுவிக்க மனு.ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்;

Update: 2025-06-13 13:25 GMT
பறிமுதல் செய்த மணல் லாரியை விடுவிக்க மனு.ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்த தமிழ்நாடு மணல் லாரிகள் உரிமையாளர் சம்மேள தலைவர் செல்லராசா மணி செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, கேரள மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான மணல் குவாரியில் இருந்து முறையான ஆவணங்களோடு 5 யூனிட் மணலை பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான லாரியில் மணல் வாங்கி வந்துள்ளார். இந்த லாரி கரூர் மாவட்டம் , குளித்தலை தாலுகா அருகே உள்ள பெரியார் மேம்பாலம் அருகே வந்தபோது, குளித்தலை உதவி ஆய்வாளர் சரவண கிரி அந்த லாரியை ஆய்வு செய்துள்ளார் அப்போது லாரியில் மணல் இருந்ததைக் கண்ட உதவி ஆய்வாளர் சரவண கிரி ஆவணங்கள் கேட்டுள்ளார். அப்போது லாரியின் ஓட்டுனர் எடுத்து வந்த மணலுக்கு உரிய ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத உதவி ஆய்வாளர் சரவண கிரி , ஓட்டுனரிடம் மாமுல் கேட்டதாக தெரிகிறது. மாமுல் தராததால் ஓட்டுநரை கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இன்று உரிய ஆவணங்களை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில்,அவருக்கு நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினர். மேலும் உதவி ஆய்வாளர் சரவண கிரி மீது மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக செல்ல ராசாமணி தெரிவித்தார்.

Similar News