குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கேரளா பகுதியான தெற்கே கொல்லங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் ரோபின் (35). எம்பிஏ பட்டதாரி. அடிதடி வழக்கு சம்பந்தமாக கடந்த மாதம் 22 ஆம் தேதி கொல்லங்கோடு போலீசார் ரோபினை கைது செய்தனர். அப்போது அங்கு வந்த தேமுதிக பிரமுகர் செல்வர்ட் என்பவர் ரோபினை வழக்கிலிருந்து விடுவிக்க ரோபின் குடும்பத்தார் இடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு ரோபினை வழக்கிலிருந்து விடுவிக்கவில்லை. இதனால் ரோபின் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளியே வந்தார். பணம் பெற்றது சம்பந்தமாக ரோபினின் அக்கா ரீனா (44) என்பவர் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வர்ட்டை தேடி வந்தனர். இந்த நிலையில் மார்த்தாண்டன் டிஎஸ்பி நல்ல சிவம் மேற்பார்வையில் தனி பிரிவு சிறப்பு போலீசார் செல்வர்ட்டை பிடித்து நேற்று இரவு கொல்லங்கோடு போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் செல்வர்ட்டை கைது செய்து இன்று குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜர் படுத்தினர்.