குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படம்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி மனைவி மகேஸ்வரி (54). இந்த தம்பதியின் மகன் ராஜேஷ் குமார் (27). பட்டதாரியான இவர் பல நிறுவனங்கள் வேலை தேடியும் தனக்கேற்ற வேலை கிடைக்காதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் சம்பவ தினம் இரவு வீட்டிலிருந்த ராஜேஷ்குமார் திடீரென விஷம் குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் கிடந்த அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜேஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.