இடியுடன் கூடிய கனமழையால் மின்சாரம் தூண்டிக்கப்பட்டது
இடியுடன் கூடிய கனமழையால் மின்சாரம் தூண்டிக்கப்பட்டது;
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு காக்கலூர் புட்லூர் மணவாள நகர் ஓதிக்காடு எடப்பாளையம் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது திருவள்ளூர் பஜார் வீதி நகர காவல் நிலையம் உள்ளிட்டவைகளை மழைநீர் சூழ்ந்தது திருவள்ளூர் செங்குன்றம் சாலை பொன்னேரி செங்குன்றம் சாலை மழை நீரில் குளம் போல் ஆகியது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஊத்துக்கோட்டை பெரியபாளையம் தச்சூர் கூட்டு சாலை கவரப்பேட்டை சோழவரம் காரனோடை தாமரைப்பாக்கம் கீழானூர் மேலானுர் மெய்யூர் ஊத்துக்கோட்டை லட்சுமி வாக்கம் பாலவாக்கம் பெரியபாளையம் ஆரணி செங்குன்றம் காரனோடை என மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது கீழானூர் விஷ்ணுவாக்கம் கரிக்கலவாக்கம் பகுதியில் இடி மின்னலுடன் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது பொன்னேரி செங்குன்றம் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியது வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர் திருவள்ளூர் நகர காவல் நிலைய வளாகத்திலும் மார்க்கெட் பகுதியில் மழை நீர் புகுந்தது சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர் வீரராகவர் கோவில் செங்குன்றம் திருவள்ளூர் சாலையில் மழைநீர் தேங்கியது வடக்கு ராஜ வீதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். கவரப்பேட்டை காவல் நிலையம் முன்பு சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கன மழை மண்ணை குளிரச் செய்தது