குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை;

Update: 2025-06-14 02:00 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேற்குத்தொடா்ச்சி மலை குற்றாலம் பகுதியில் நேற்று முன் தினம் முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. பேரருவியில் நள்ளிரவுமுதல் தண்ணீா் அதிகளவில் வரத் தொடங்கியது. இதையடுத்து அந்த அருவியிலும், அதனைத் தொடா்ந்து ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டியும், ஐந்தருவியில் கிளைகளே தெரியாத அளவிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நேற்று முழுவதும் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

Similar News