தென்காசி திருவள்ளுவா் கழக திருக்கு விழாவில் பட்டிமன்றம்

திருவள்ளுவா் கழக திருக்கு விழாவில் பட்டிமன்றம்;

Update: 2025-06-14 02:02 GMT
தென்காசி திருவள்ளுவா் கழக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேராசிரியா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். தென்காசி மூத்தோா் மன்றம் எம்.ஆா்.அழகராஜா முன்னிலை வகித்தாா். கழகப் புலவா் கா.ச. பழனியப்பன் முன்னோட்டம் வழங்கினாா். ‘வள்ளுவச் சிந்தனையில் மானுட வாழ்வைப் பெரிதும் மேம்படுத்துவது’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில், ‘பண்புநலனே’ என்ற தலைப்பில் க.சோ. கல்யாணிசிவகாமிநாதன், உஷா முத்துகிருஷ்ணன், சரவணசெல்வனும், ‘வினைத்திறனே’ என்ற தலைப்பில் சேரை பாலகிருஷ்ணன், இந்திரா ஜெயச்சந்திரன், உமா சங்கா் ஆகியோரும் பேசினா். திருவள்ளுவா் கழக செயலா் இராம. தீத்தாரப்பன், பத்மாகணபதிசுப்பிரமணியன், அப்துல்அஜீஸ், டாக்டா் பத்மானந்தம் , டாக்டா் தங்கபாண்டியன், கழுகுமலை, கடையம் திருவள்ளுவா் கழகத்தினா் கலந்து கொண்டனா்.

Similar News