கன்னியாகுமரி ,அகஸ்தீஸ்வரம் கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதில் கொட்டாரம் அடுத்த மிஷன் காம்பவுண்ட் பகுதியில் வசித்து வரும் பால் ரத்னராஜ் என்பவரது வீட்டின் அருகில் நின்றிருந்த பழமை வாய்ந்த மரம்,அவரது வீட்டில் மதில் சுவர் மீது முறிந்து விழுந்தது . வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டிருந்ததால், வீட்டில் வசித்து வந்த அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் தவித்தினர். அதுமட்டுமின்றி மரம் முறிந்து விழுந்த பகுதியில் அவர்களது சொகுசு கார் நிறுத்துவது வழக்கம் . ஆனால் நேற்று நிறுத்தவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக சொகுசு காரும் தப்பியது. முறிந்து விழுந்த மரத்தின் மற்றொரு பகுதி ஆபத்தான நிலையில் இருப்பதால் அதை பொதுப்பணித்துறை அகற்றி தருமாறு வீட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.