கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது

திண்டுக்கல் அருகே பெயிண்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது;

Update: 2025-06-14 02:23 GMT
திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா என்பவர் ம.மு.கோவிலூர் அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சில பாடி குழந்தைபட்டி பகுதியை சேர்ந்த சின்னகாளை மகன் குமரேசன் என்பவர் சூர்யா கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்ததாக சூர்யா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குமரேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News