மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: பொம்மலாட்ட நிகழ்வு
தமிழகத்தோடு குமரி மாவட்டத்தை இணைக்க போராடி வெற்றி கண்ட மார்ஷல் நேசமணி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்வு நடைபெற்றது.;
தமிழகத்தோடு குமரி மாவட்டத்தை இணைக்க போராடி வெற்றி கண்ட மார்ஷல் நேசமணி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்வு நடைபெற்றது. தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் செல்போனினால் ஏற்படும் தீமைகளை பற்றி எடுத்துக் கூறி புத்தகங்களை வாசிக்க சொல்லும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேணி தலைமை தாங்கினார். காமராஜர் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி கலையின் குரல் நிறுவனர் சக்திவேல், குமிழ் முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன், புத்தக வாசிப்பு நற்பணி மன்ற மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோர் இணைந்து மாபெரும் பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர். ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்றம் தலைவர் லாரன்ஸ் செயலாளர் வழக்கறிஞர் சிலுவை, பொருளாளர் ஆஸ்வால்ட், அமைப்பாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.