கோவை: மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு !
மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நகர்மன்ற தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் அருள் வடிவு, நகராட்சி ஆணையாளர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சியில் ஊழல் நடைபெறுவதாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். திமுக கவுன்சிலர்கள் மற்றும் நகர்மன்ற தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சலசலப்பை படம் பிடித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கூட்டத்திற்கு முன் தி.மு.க. உறுப்பினர்களும், பெண் உறுப்பினர்களின் கணவர்களும் அச்சுறுத்தல் விடுப்பதாக கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னுசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.