காரிமங்கலம் அருகே காரில் குட்கா கடத்தியவர் கைது
காரிமங்கலத்தில் காரில் 400 கிலோ குட்கா கடத்தியவர் கைது, கார் பறிமுதல்;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் வழியாக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில், காரிமங்கலம் காவலர்கள் கும்பார அள்ளி சோதனை சாவடியில் இன்று அதிகாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற் கொண்டனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்பட்டதும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த குஜராத் மாநிலம் ஜாடியா மாவட் டத்தை சேர்ந்த கணேஷ் பாய்ரபாரி என்பவரை காவலர்கள் கைது செய்து, 400 கிலோ குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.