அந்த சார் யாரு? ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை சீமான் பேட்டி
யார் அந்த சார் ? என்பது இருக்கட்டும் கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார் ? - தூத்துக்குடி தூத்துக்குடியில் சீமான் பேட்டி;
தூத்துக்குடி; யார் அந்த சார் ? என்பது இருக்கட்டும் கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார் ? - தூத்துக்குடி தூத்துக்குடியில் சீமான் பேட்டி தமிழ் கடவுள், தமிழ் என்றாலே முருகன். கோவில் கட்டியது நாங்கள். இறைவன் எங்கள் இறைவன். எங்கள் தாய் மொழியில் குடமுழுக்கு இருக்காது (திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு) என்பது எவ்வளவு பெரிய கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் வெற்று முழக்கம். தாய் மொழியை இழந்த எந்த இனம் தமிழக வரலாற்றில் வாழ்ந்துள்ளது ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து தான் உரிமையை பெற்றுள்ளோம் 76 கும்பத்தில் ஒரு கும்பத்தில் கூட தமிழில் மந்திரங்கள் எழுதப்படவில்லை. தாய்மொழி வழிபாடு என்பது அடிப்படை உரிமை. அதை கேட்டு போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. திராவிட ஆட்சியாளர்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆயிரக்கணக்கான கோவிலில் குடமுழுக்கு நடத்துகிறோம் என்கிறார்கள். ஏசுநாதருக்கு தமிழில் மந்திரங்கள் ஓதப்படுகிறது. என் தாய் மொழியில் இல்லாத நற்சொல் வேறு எந்த மொழியில் உள்ளது. முருகனே தமிழ் தான். முருகனை விட்டு தமிழை எப்படி பிரிப்பிர்கள். தமிழை விட்டு முருகனை எப்படி பிரிப்பிர்கள் சைவத்தில் இருந்து தமிழை பிடிக்க முடியாது. தமிழில் இருந்து சைவத்தை பிரிக்க முடியாது . வழிபாட்டு தலங்களில் இருந்து வழக்காடு தலங்களில் இருந்து தமிழ் மொழி வெளியேற்றப்படுகிறது. தமிழ் அழிந்தால் தமிழ் இனம் அழிந்து விடும் திமுக 4 ஆண்டு சாதனை, மின்கட்டணம் குறையவில்லை. சொத்து வரி குறையவில்லை. கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைகிறது இது யாருக்கும் பயன் தரும். திரைத்துறை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. வேறு யாரும் படம் எடுக்க முடியுமா? படம் எடுத்தால் வெளியிட முடியுமா? திரையரங்கு தருவீர்களா? அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் பாலியல் தொல்லையில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர் நாட்டில் பாதுகாப்புக்கு உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன ? கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன? அமலாக்கத்துறை சோதனை வந்த பிறகு முதல்வர் பிரதமர் மோடியின் கையைப் பிடித்துக் கொண்டு பேசுகிறார். இங்கு வந்த பிறகு பிரதமர் மோடியை எதிரி என்கிறார். நாளை திருச்செந்தூர் அருகே நடக்கும் பனையேறும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தடை என்றால் அதை உடை . அஞ்சுவதும் அடிபணிவதும் எங்களிடம் கிடையாது. பனையேறும் போது வெறும் கையோடு இருக்க மாட்டேன் பாளை அரிவாளுடன் இருப்பேன். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கள் இறக்கும் போது எங்கள் மாநிலத்தில் மட்டும் இறக்க அனுமதி இல்லையே ஏன்? கள் என்பது இயற்கையின் அருண் கொடை. கள் உணவில் ஒரு பகுதி. அது மது அல்ல. தமிழ்நாட்டில் மட்டும்தான் சாராயம் தயாரிப்பாளரும் விற்பனையாளரும் ஒரே ஆளாக இருக்கின்றனர். பாஜக முருகன் மாநாடு நடத்துவது ஒரு மார்க்கெட்டிங் யார் அந்த சார்? என்பது இருக்கட்டும். கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்த அந்த சார் யார்? - தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி