கருங்கலில் தையல் கலைஞர்கள் சங்க வட்டார மாநாடு

கன்னியாகுமரி;

Update: 2025-06-14 08:09 GMT
கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க கிள்ளியூர் கிழக்கு வட்டார 10 வது மாநாடு வட்டார தலைவர் கில்டா ரமணிபாய் தலைமையில் கருங்கல் ஜி எஸ் பவனில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் மேரி சகாயம் கொடியேற்றி வைத்து அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். தையல் கலைஞர்கள் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் ஐடா ஹெலன் துவக்க உரையாற்றினார். செயலாளர் வேலை அறிக்கையை சுசிலா பாய் சமர்ப்பித்தார். பொருளாளர் வரவு செலவு அறிக்கை அல்போன்ஸ் சமர்ப்பித்தார். மாநாட்டை வாழ்த்தி தமுஎகச மாவட்ட கமிட்டி உறுப்பினர் சாந்தகுமார் ,கட்டுமான தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் ரசல் ஆனந்தராஜ் , சிபிஎம் கிள்ளியூர் கிழக்கு வட்டார செயலாளர் ராஜா , சிஐடியு மாவட்ட துணை தலைவர் பொன்.சோபனராஜ் ஆகியோர் பேசினர்.சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரகலா நிறைவுரையாற்றினார். தொடர்ந்து வட்டார பொறுப்பாளர் தேர்வு நடந்தது. தலைவராக கில்டாரமணி பாய், செயலாளராக சுசீலா பாய், பொருளாளராக அல்போன்ஸ், உதவித்தலைவர்களாக மேரி சகாயம், கிளேப்பா மேரி உதவிச் செயலாளர்களாக சகாய ரூபி, கிரேசி தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், மகப்பேறு உதவித்தொகையை 20 ஆயிரமாக வழங்க வேண்டும், 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், வீடுகட்ட உதவித்தொகை ரூ 4 லட்சம் வழங்க வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சகாய ரூபி நன்றி கூறினார்.

Similar News