மேட்டூர் அணையிலிருந்து திறந்து விட்ட தண்ணீர் மாயனூர் கதவணையை கடந்து சென்றது
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விட்ட தண்ணீர் மாயனூர் கதவணையை கடந்து சென்றது;
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விட்ட தண்ணீர் மாயனூர் கதவணையை கடந்து சென்றது ஆண்டுதோறும் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசன தேவைக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் அடிப்படையில் கடந்த 12ம் தேதி தமிழக முதல்வர் தண்ணீர் திறந்து வைத்தார். அந்த தண்ணீர் நேற்று அதிகாலை கரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில், இன்று அதிகாலை மாயனூர் கதவணையை வந்தடைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 3571 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அந்த தண்ணீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தண்ணீர் நாளை தஞ்சை மாவட்டத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.