டெக்ஸ் பார்க் அருகே டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.
டெக்ஸ் பார்க் அருகே டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.;
டெக்ஸ் பார்க் அருகே டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா , தாளப்பட்டி அருகே வெங்ககுழி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வாங்கிலியப்பன் வயது 85. இவர் ஜூன் 12-ம் தேதி மாலை 6: 10- மணியளவில் , கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் கரூர் டெக்ஸ்பார்க் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது , அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து வாங்கிலியப்பன் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாங்கிலியப்பனை மீட்டு கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த வாங்கிலியப்பனின் மகன் சங்கர் வயது 50 என்பவர் அளித்த புகாரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , பேருந்தை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர், சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே அரக்கனூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.