சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

லயன்ஸ் கிளப் சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ஏரி சாலையில் தொடங்கி சுமார் 2 கிலோ மீட்டர் பேரணியாக சென்று இறுதியில் மர கன்றுகள் நடப்பட்டது;

Update: 2025-06-14 09:18 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுச்சூழலை காக்கும் விதமாகவும் கொடைக்கானலில் சிறியவர் முதல் பெரியவர் வரை 100-க்கும் மேற்பட்டோர் வயது வரம்பு பாராமல் பேரணியில் கலந்து கொண்டனர். மேலும் அனைவரும் ஒன்று திரண்டு பேரணியாக ஏழு ரோடு சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், அண்ணா சாலை, மூஞ்சிக்கள் மற்றும் ஏரி வந்தடைந்தனர் மர கன்றுகளை ஊன்றினர். இந்நிகழ்ச்சியானது காலை 6 .30 அளவில் தொடங்கி 9:00 மணி அளவில் நிறைவடைந்தது இந்நிகழ்ச்சியின் முக்கிய பங்காக கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார் பகுதிகளை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் மரங்களை வளர்த்து அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் இரண்டு கிலோ மீட்டர் பேரணியாக சென்றுள்ளனர்.

Similar News