குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்,

430 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரம் உடனடி தீர்வு;

Update: 2025-06-14 12:02 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. சார்பு நீதிபதி முத்துச்சாமி தலைமை வகித்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி தமிழரசி, குற்றவியல் நடுவர்கள் ஹரிராம், சசிகலா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி யாகத்யாமரியா, வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் சரவணன், பொருளாளர் மாணிக்கவேல், அரசு வழக்கறிஞர் நீலமேகம், முன்னாள் அரசு வழக்கறிஞர் நாகராஜன், செயற்குழு உறுப்பினர் முருகன், சோழமண்டல மண்டல மேலாளர் ஸ்ரீஜித் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் குடும்ப வழக்கு, ஜீவனாம்ச வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, சிவில் வழக்கு உள்ளிட்ட 430 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரத்து 60 உடனடி தீர்வு ஏற்பட்டு அதற்கான உத்தரவு நகலை சார்பு நீதிபதி முத்துசாமி பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலக பணியாளர்கள், வழக்காடிகள் என பலரும் கலந்து கொண்டனர்

Similar News