எல்ஜி பெருங்காயம் போலியாக தயாரித்த மூன்று பேர் கைது

எல்ஜி பெருங்காயம் போலியாக தயாரித்த மூன்று பேர் கைது;

Update: 2025-06-14 18:12 GMT
சென்னை அயனாவரம் சென்னையில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பை எல்ஜி பெருங்காயம் போலியாக தயாரித்து விற்பனை செய்த மூன்று பேரை அறிவுசார் சொத்துரிமைகள் அமலாக்க துறையினர் மூன்று பேரை கைது செய்து விசாரணை. நிறுவனத்தின் மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்து விசாரணை. மூன்று நபரிடம் இருந்து போலியான அட்டை, மூடி, லேபிள் இயந்திரங்கள், பிளாஸ்டிக் டப்பா போன்றவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை சூளைமேட்டில் ஐஃபோகஸ் ஐபி சர்வீசஸ் எல்எல்பி, என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த நிறுவனத்தின் எல்ஜி பெருங்காயம் தயாரிப்புகளை சென்னை கொருக்குப்பேட்டை கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் போலியாக தயாரிப்புகளை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐஃபோகஸ் ஐபி சர்வீசஸ் எல்எல்பி, மேலாளர் குமரவேல் என்பவர் சென்னை அயனாவரத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் அமலாக்க பிரிவில் சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் இவ்வாறு குற்ற செயலில் ஈடுபட்டு வருகிறார் என புகார் ஒன்றை கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட அறிவுசார் சொத்துரிமைகள் அமலாக்க துறையினர் அதிரடியாக சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் எல்ஜி கூட்டு பெருங்காயத்தை போலியாக தயாரித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சீனிவாசன், மணி மற்றும் மூர்த்தியை கைது செய்து சென்னை அயனாவரத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் அமலாக்க துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் போலியாக அட்டை, மூடி, லேபிள் இயந்திரங்கள், பிளாஸ்டிக் டப்பா போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News