தங்க தாலி மற்றும் சீர்வாரிசைகள் கொடுத்து இலவச திருமணம்
தங்க தாலி மற்றும் சீர்வாரிசைகள் கொடுத்து இலவச திருமணம்;
திருவள்ளூர்: பொருளாதாரத்தில் பின் தங்கிய இணைகளுக்கு 4 கிராம் தங்கத் தாலி 70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு சிறுவாபுரி முருகன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு ! அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய அத்துறையின் அமைச்சர் பி. கே. சேகர்பாபு 2025 -2026 ஆண்டுக்கான அறிவிப்பு எண் 01. பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள இணைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருமண சீராக 4 கிராம் தங்கத் தாலியும், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார், அதன்படி வருகின்ற ஜூலை 2.7.2025 தேதி முதல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தகுதியான இணைகளுக்கு சிறுவாபுரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திரு சார்பில் திருமணம் நடைபெற உள்ளதால் பொருளாதரத்தில் பின்தங்கியுள்ள இணைகள் மற்றும் தகுதியானவர்கள் உடனடியாக முன்பதிவு செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது மேலும் தகவல்களை பெற விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக கோவில் நிர்வாகத்தை அணுகலாம் எனவும் அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.