குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி பாலூர் பகுதியில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் விவசாயத்திற்கும், குளிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதி பொதுமக்கள் சேர்ந்து குளத்தில் உள்ள புதர்களை சுத்தம் செய்தனர். ஆனால் தற்போது மீண்டும் இந்த குளம் பாசிகளால் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் குளத்தை பொதுமக்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை குளத்தில் உள்ள புதர்களை அகற்றி தூர்வாரி சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.