உலக இரத்த கொடையாளர் தின விழா

குமரி அரசு மருத்துவ கல்லூரியில்;

Update: 2025-06-15 03:49 GMT
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக இரத்த கொடையாளர் தின விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு, அதிக முறை ரத்தம் தானம் செய்தவர்ளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.      விழாவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  முதல்வர் மரு.இராமலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.கிங்ஸ்லி ஜெபசி, இணை இயக்குனர் குடும்ப நலம் மரு.ரவிக்குமார் துணை முதல்வர்.மரு.சுரேஷ் பாலன், உறைவிட மருத்துவர்வர்கள் மரு.விஜயலட்சுமி, மரு.ரெனிமோள், இரத்த வங்கி மருத்துவர்                மரு .ராகேஷ் துறை அலுவலர்கள், பொதுமக்கள், இரத்த கொடையாளர்கள், கல்லூரி மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Similar News