கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாரத பிரதமர் 11 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்தும் , மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்தும் ஆலோசனைக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நேற்று மாலை கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்பியுமான ராமலிங்கம் கலந்து கொண்டு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்தும், அந்த நிகழ்ச்சியில் கட்சியினர் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்தும் விளக்கி கூறினார். மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் சிறப்பான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் கட்சியினருடைய செயல்பாடுகள் சிறப்பாக அமைய வேண்டும் என கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.