கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினார் செந்தில் பாலாஜி.

கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினார் செந்தில் பாலாஜி.;

Update: 2025-06-15 09:02 GMT
கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 2,3,4, 22, 23, 30, 31, 32,33 பகுதிகளில் ரூபாய் 5.62 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் அந்தந்த பகுதியில் நடைபெற்றது. இதில் மண் சாலையை தார்சாலையாக மேம்படுத்துதல், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பேவர் ப்ளாக் அமைத்தல், சமையலறை, சைக்கிள் செட் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணிகளை ,மேற்கொள்ளுதல் , லாரி மேடு பகுதியில் புதிதாக ஆழ்குழாய் கிணறுடன் கூடிய சின்டெக்ஸ் டேங்க் அமைத்தல் ,மழை நீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைத்தல் ,தார் சாலையை மேம்படுத்தும் பணி , திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பிடத்தின் முன்பாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி போன்ற பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு அடிக்கல் நட்டு அந்த பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் , துணைமேயர் தாரணி சரவணன்,மாநகராட்சி மண்டல தலைவர்கள் , மாநகராட்சி உறுப்பினர்கள்,அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பித்தனர்.

Similar News