நிதி நிறுவனத்தினர் அத்துமீறல்

குமாரபாளையத்தில் நிதி நிறுவனத்தினர் அத்துமீறிய செயலால் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;

Update: 2025-06-15 13:12 GMT
குமாரபாளையம் காந்திநகர் அங்காளம்மன் கோவில் அருகே வசிப்பவர் மணிகண்டன், 27. இவர் அதே பகுதியில் உள்ள பெயிண்ட் டீலர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று சுமார் மாலை 02:00 மணியளவில், வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது சரவணா தியேட்டர் பகுதியில் உள்ள நிதி நிறுவன நபர்கள், மணிகண்டன் வாங்கிய கடன் தொகையை கேட்டு வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மணிகண்டனை அடித்து காரில் அழைத்து சென்றதுடன், மணிகண்டன் பணியாற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான, ஸ்ப்லேண்டர் பிளஸ் டூவீலரையும் நிதி நிறுவனத்தார் எடுத்து சென்றதாக தெரிகிறது. இது குறித்து மணிகண்டன் பணியாற்றும் நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் கூறியதாவது: மணிகண்டன் எங்களது நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினருக்காக சரவணா தியேட்டர் அருகே உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக எனது பணியாளர் மணிகண்டனை நான்கு பேர் கொண்ட கும்பல் வந்து, அடித்து, மணிகண்டனை மூன்று பேர் காரில் அழைத்து செல்ல, நான்கு பேரில் ஒருவன் தனது நிறுவன டூவீலரை எடுத்து சென்றுள்ளான். தனது டூவீலரை நிதி நிறுவனத்தார் திருடி சென்றதாகவும்,. மணிகண்டன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். பலத்த அடிபட்டதில், மணிகண்டன், குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், குமாரபாளையம் நிதி நிறுவனத்தார் இது போன்ற அராஜக செயலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News