குட்கா விற்பனை செய்த நபர் கைது!
தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.;
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி உதவி காவல் ஆய்வாளர் முருகவேல் தலைமையிலான போலீசார் வளத்தூர் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் விமல் ராஜ் (30) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.