அதுல்யநாதேஸ்வரர் கோவில் காணிக்கை எண்ணும் பணி

பணி;

Update: 2025-06-16 03:50 GMT
அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அறங்காவலர் குழு உறுப்பினர் மாலதி, அறநிலையத்துறை ஆய்வாளர் பாலமுருகன், செயல் அலுவலர் அறிவழகன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இப்பணியில், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 89 ஆயிரத்து 845 ரூபாய் இருந்தது. அறங்காவலர் உமாமகேஸ்வரி, கவுன்சிலர் குமார், அறநிலையத்துறை எழுத்தர் மிரேஷ் குமார் உடனிருந்தனர்.

Similar News