மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கும் புகார் மனுக்கு மதிப்பில்லை என ஊராட்சி மன்ற தலைவர் வேதனை.

மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கும் புகார் மனுக்கு மதிப்பில்லை என ஊராட்சி மன்ற தலைவர் வேதனை.;

Update: 2025-06-16 05:07 GMT
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கும் புகார் மனுக்கு மதிப்பில்லை என ஊராட்சி மன்ற தலைவர் வேதனை. மொட்ட பெட்டிசனுக்கு இருக்கும் மதிப்பு, மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கும் புகார் மனுக்கு மதிப்பில்லை என ஊராட்சி மன்ற தலைவர் வேதனை. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் உடையாமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன உடையாமுத்தூர், ஜங்குமபுரம் பகுதிகளுக்கு திருவண்ணாமலை மெயின் ரோட்டிலிருந்து அப்பகுதிகளுக்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக பல வருடங்களாக உள்ளது. அந்த வழியாக செல்லும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் உடையாமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து உள்ளார். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மொட்ட பெட்டிசனுக்கு இருக்கும் மதிப்பு மரியாதை மாவட்ட ஆட்சியர், மற்றும் அதிகாரிகளிடம் கொடுக்கும் புகார் மனு மீது மதிப்பு இல்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

Similar News