ரெட்டிபாளையம் அருகே டூவீலர்கள் மோதல்.கணவன் மனைவி படுகாயம்.

ரெட்டிபாளையம் அருகே டூவீலர்கள் மோதல்.கணவன் மனைவி படுகாயம்.;

Update: 2025-06-16 06:52 GMT
ரெட்டிபாளையம் அருகே டூவீலர்கள் மோதல்.கணவன் மனைவி படுகாயம். கரூர் மாவட்டம் , சின்ன தாராபுரம் , வடக்கு தெருவை சேர்ந்தவர் ரபிக் பாட்ஷா வயது 32. இவரது மனைவி ஷபனா வயது 31. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 :35 மணி அளவில் , கரூர் - கோவை சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் ரெட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது,அதே சாலையில் வேகமாக வந்த கரூர் , வடிவேல் நகர் , பாரதியார் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் வயது 50 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், ரபீக் பாட்சா ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் கணவன் - மனைவி இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ரபீக் பாட்ஷா அளித்த புகாரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , டூவீலரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் கரூர் நகர காவல் துறையினர்.

Similar News