கார், மோட்டார் சைக்கிள் மோதி விபத்து கணவன்-மனைவி படுகாயம்

சேடப்பட்டி அருகே செம்பட்டி- வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் கார், மோட்டார் சைக்கிள் மோதி விபத்து கணவன்-மனைவி படுகாயம்;

Update: 2025-06-16 10:29 GMT
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கச்சடை வயது 45. இவரது மனைவி சித்ரா வயது 40 ஆகிய இருவரும் 15/ 6 /2025 இன்று இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று விட்டு அழகர் நாயக்கன்பட்டிக்கு வருவதற்காக செம்பட்டி- வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் சேடப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது பின்புறமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன்- மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் விஜய் பாண்டி தலைமையிலான காவலர்கள் விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News