மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

ராணிப்பேட்டை சோழிங்கநல்லூரில் வழக்கறிஞர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-06-16 12:20 GMT
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கநல்லூரில் முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அதனைக் கண்டித்து இன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் மற்றும் கொலை நடைபெற்று வருகிறது ஆகவே வழக்கறிஞருக்கு மத்திய மாநில அரசுகள் பணி வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Similar News