கரூரில் மினி பேருந்துகளை அதன் வழித்தடத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

கரூரில் மினி பேருந்துகளை அதன் வழித்தடத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.;

Update: 2025-06-16 13:35 GMT
கரூரில் மினி பேருந்துகளை அதன் வழித்தடத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை தஞ்சாவூரில் போக்குவரத்து துறை சார்பில் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி வாயிலாக வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில். அனுமதி பெற்ற மினி பேருந்துகளை அதன் வழிதடத்தில் துவங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி , எம்எல்ஏக்கள் மாணிக்கம் , இளங்கோ , சிவகாமசுந்தரி , மாநகராட்சி மேயர் கவிதா , துணை மேயர் தாரணி சரவணன் ,வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மினி பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Similar News