மது போதையில் வலிப்பு ஏற்பட்டு மாட்டு வியாபாரி இறப்பு
குமாரபாளையத்தில் மது போதையில் வலிப்பு ஏற்பட்டு மாட்டு வியாபாரி இறந்தார்.;
குமாரபாளையம் அருகே ஓட்டன்கோயில் பகுதியில் வசித்து வந்தவர் தனசேகரன், 43. மாட்டு வியாபாரி. இவர் திருமணம் ஆகாதவர். இவருக்கு குடிப்பழக்கம் மற்றும் வலிப்பு நோய் இருந்துள்ளது. ஜூன் 12ல் காலை 08:30 மணியளவில், அரசு மருத்துவமனை முன்பு குடி போதையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இவரை இவரது நண்பர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 11:45 மணியளவில் இறந்தார். இவரது உறவினர் ஜெயபிரகாஷ், டாக்டரிடம் கேட்டதற்கு, போதையில் வலிப்பு வந்து, கீழே விழுந்ததில், தலையில் பலத்த அடிபட்டது. இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்று கூறியுள்ளார். இது குறித்து ஜெயபிரகாஷ் குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்