டூவீலர் மீது, தனியார் நிறுவன பேருந்து மோதியதில் ஒருவர் படுகாயம்
குமாரபாளையத்தில் டூவீலர் மீது, தனியார் நிறுவன பேருந்து மோதியதில் ஆவின் பால் வியாபாரி பலத்த காயமடைந்தார்.;
குமாரபாளையம் காமராஜ் நகரில் வசிப்பவர் ராகுலன், 29. ஆவின் பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை 02:00 மணியளவில், தனது பல்சர் வாகனத்தில் பள்ளிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த தனியார் நிறுவன பேருந்து மோதியதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இவர் மீது மோதி விட்டு தனியார் நிறுவன பேருந்து நிற்காமல் சென்று விட்டது. இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராகுலன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.