திருச்சி நீதிமன்றம் அருகே தீக்குளிக்க முகுந்த நபரால் பரபரப்பு
செல்போன் விற்ற பணத்தை நண்பர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு;
கரூர் மாவட்டம் லாலாபேட்டியை சேர்ந்தவர் முகமது கனி. இவர் அவருடைய நண்பர் மணப்பாறை சேர்ந்த அஜ்மீர் என்பவர் மூலமாக அவருடைய செல்போனை விற்பனை செய்துள்ளார். அந்த செல்போனை 30 ஆயிரத்திற்கு விற்ற அவரது நண்பர் அஜ்மீர் ரூபாய் 15,000 பணத்தை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்நாள் மன உளைச்சல் அடைந்த முகமது கனி இன்று திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இத்தனை அடுத்த உடனடியாக உடனடியாக அங்கிருந்த வழக்கறிஞர்கள் அவரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர். அவரை விசாரித்த நீதிபதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் அடிப்படையில் நீதிமன்றம் சென்ற செசன்ஸ் நீதிமன்ற போலீசார் முகமது கனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.