தூய்மை பணியாளர் நல சங்கம் சார்பில் மனு
திண்டுக்கல்லில் தூய்மை பணியாளர் நல சங்கம் சார்பில் மனு;
கொடைக்கானல் நகராட்சியில் முறையாக சம்பளம் வழங்காத தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மை பணியாளர் நல சங்கம் சார்பில் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். கலெக்டரிடம் அளித்த மனதில் தெரிவித்துள்ளதாவது: கொடைக்கானல் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.624 வழங்க நிர்ணயம் செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், கொடைக்கானல் நகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனம், கலெக்டரின் உத்தரவை மதிக்காமல், இன்று வரை ரூ.350 மட்டுமே தினக்கூலியாக வழங்குகின்றனர்.மேலும் PF, ESI பிடித்தம் செய்வதிலும் முறைகேடு செய்துள்ளனர். இந்த முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, பலமுறை மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி ஆணையாளர் மீதும், தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது கலெக்டர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் தெரிவித்திருந்தனர்.