பூவை ஜெகன் மூர்த்தியார் இல்லத்திற்கு சென்ற ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி
புரட்சி பாரத கட்சி பூவை ஜெகன் மூர்த்தியார் இல்லத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி. ஜெகன் மூர்த்தியாரின் மனைவியை நேரில் சந்தித்தார்.;
புரட்சி பாரத கட்சி பூவை ஜெகன் மூர்த்தியார் இல்லத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி. ஜெகன் மூர்த்தியாரின் மனைவியை நேரில் சந்தித்தார். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே ஆண்டரசன் பேட்டை பகுதியில் உள்ள புரட்சி பாரத கட்சியின் தலைவரும் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜகன் மூர்த்தியாரின் இல்லத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரின் மனைவி பொற்கொடி நேரில் சென்று சந்தித்து நேற்று ஜெகன் மூர்த்தியாரை கைது செய்ய காவல்துறையினர் கெடுபிடி காட்டியது குறித்தும் நேற்று நடந்த சம்பவம் குறித்தும் காவல்துறையினரின் விடாப்பிடியாக வீட்டின் முன்பு 200க்கும் மேற்பட்ட காவல்துறையினரை குவித்து கைது செய்ய முயன்றது குறித்தும் புரட்சி பாரத கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியாரின் மனைவி மற்றும் அவரது மகளிடம் கேட்டறிந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கலந்துரையாடி தைரியம் கூறிச் சென்றனர். ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவியுடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் உடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது