அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
எஸ்.கே.டி. வினோதினி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது;
திருச்சி, தாராநல்லூரைச் சேர்ந்த எஸ்.கே.டி. வினோதினி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஏழை மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நோட்டுப் புத்தகங்கள், ஸ்கூல் பேக் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 13-ம் ஆண்டாக அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா தாராநல்லூரில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்கேடி பாண்டியன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் எஸ்.கே.டி.சித்ரா, பொருளாளர் எம்.தங்கப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன், மார்க்கெட் பகுதி செயலாளர் கலில் ரகுமான், காந்தி மார்க்கெட் நலச்சங்க யு.எஸ்.கருப்பையா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஆறுமுகம், என்.டி.கந்தன் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர். விழாவினை முன்னிட்டு காலை அன்னதானம் நடைபெற்றது.