நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல்லில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை;
திண்டுக்கல், R.V.நகர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜ்குமார்(43) நகை பட்டறை தொழிலாளி இவர் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.