கலைஞர் நூலகத்தில் பழனி எம்எல்ஏ ஆய்வு

ரெட்டியார்சத்திரத்தில் கலைஞர் நூலகம் மற்றும் திருவுருவ சிலை அமைக்கும் பணிகளை பழனி எம்எல்ஏ ஆய்வு;

Update: 2025-06-16 19:20 GMT
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் இளைஞர் அணி சார்பில் நூலகம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி ரெட்டியார்சத்திரத்தில் "கலைஞர் நூலகம் மற்றும் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலை அமைக்கும் பணிகளை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி செந்தில் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதில் இளைஞர் அணி துணை செயலாளர் அனந்தகுமார், அவைத் தலைவர் காமாட்சி, பொருளாளர் சத்யாமூர்த்தி, துணை செயலாளர் பிலால் உசேன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News