பர்கூர்:ஆதரவற்ற மகளிர் நலம் துறை சார்பில் சிறப்பு முகாம்.

பர்கூர்:ஆதரவற்ற மகளிர் நலம் துறை சார்பில் சிறப்பு முகாம்.;

Update: 2025-06-17 08:03 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலம் துறை சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் சி. முருகன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சத்துணவு மேனேஜர் குணசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால கண்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் பெண்களிடம் 260 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்தனர்.

Similar News