உயர்கல்வி தொடராத மாணாக்கர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

உயர்கல்வி தொடராத மாணாக்கர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-06-17 10:12 GMT
உயர்கல்வி தொடராத மாணாக்கர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது கரூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில் பெற்றோரை இழந்த உயர்கல்வி தொடராத மாணவ மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக் கடன் மற்றும் உதவித் தொகை பெறுதல் போன்ற விவரங்கள் தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. மேலும் தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். அந்த வகையில் இன்றைய தினம் முதற்கட்டமாக பெற்றோரை இழந்த உயர்கல்வி தொடராத 27 மாணவ, மாணவியர்களிடம் அவர்களுடைய உயர்கல்வி தடைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு தொடர்புடைய துறைகளின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக கல்விக் கடன் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு பிரத்யேகமாக வழிகாட்டும் சேவை மையம் கட்டணமில்லா கைப்பேசி எண் 9566566727 என்ற எண்ணில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையமானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து அலுவலக நாட்களிலும் செயல்படும். மாணாக்கர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு மேற்கண்ட கட்டணமில்லா கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெறலாமென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ செல்வமணி, உதவி ஆணையர் கலால் கருணாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலசக்திகங்காதரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார், உயர்கல்வி வல்லுநர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News