தந்தையர் தினவிழா கொண்டாட்டம்
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் தந்தையர் தினவிழா கொண்டாடப்பட்டது;
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் தந்தையர் தினவிழா கொண்டாடப்பட்டது.குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் தந்தையர் தினம் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. தந்தையரை போற்றுவோம் எனும் தலைப்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏழை, எளிய 50 மாணவ, மாணவியருக்கு பள்ளி நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. 50 பேருக்கு நோட்டுகள் வழங்கிய குமராபாளையத்தை சார்ந்த எக்ஸல் லேப், மைதீன் கனி, தனியார் மருத்துவமனை நிர்வாகி மணிகண்டன், குப்பாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி ஆகியோர்களுக்கு மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர். இதில் சௌந்தர், சுஜாதா, கோபாலகிருஷ்ணன், மகாலட்சுமி, பிரபாகர், மற்றும் பலர் பங்கேற்றனர்.