டூவீலர், தனியார் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது

குமாரபாளையத்தில் டூவீலர், தனியார் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில், பெண் படுகாயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-06-17 11:44 GMT
குமாரபாளையம் அசோகபுரம் பகுதியில் வசிப்பவர் கவுரி, 28. தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் மாலை 06:30 மணியளவில் வேலை முடிந்து, தனது யமஹா பேசினோ டூவீலரில், வட்டமலையில் இருந்து, சர்வீஸ் சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் பின்னால் வேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ், இவர் வந்த டூவீலர் மீது மோத, கவுரி பலத்த காயமடைந்தார். இவரை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து, இவரது கணவர் இளங்கோ, 33, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மணிகண்டன், 18, என்பவரை கைது செய்தனர். --

Similar News