கரூர்-அண்ணா சிலை யாருக்கு டூவீலர்கள் மோதல். இளைஞர் படுகாயம்.
கரூர்-அண்ணா சிலை யாருக்கு டூவீலர்கள் மோதல். இளைஞர் படுகாயம்.;
கரூர்-அண்ணா சிலை யாருக்கு டூவீலர்கள் மோதல். இளைஞர் படுகாயம். கரூர் மாவட்டம் , மண்மங்கலம் , ஓடையூர் பகுதியை சேர்ந்தவர் மதன்ராஜ் வயது 28, இவர் நேற்று முன் தினம் மாலை 6 மணி அளவில்,பழைய அரசு மருத்துவமனையில் இருந்து ஜவகர் பஜார் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே வந்தபோது , எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நபரின் டூவீலர் மதன்ராஜ் டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மதன்ராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது ? அதன் ஓட்டுனர் யார் ? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.