லிங்கத்தூர் நால் ரோடு அருகே சிறுவன் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து.பெண் படுகாயம்.
லிங்கத்தூர் நால் ரோடு அருகே சிறுவன் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து.பெண் படுகாயம்.;
லிங்கத்தூர் நால் ரோடு அருகே சிறுவன் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து.பெண் படுகாயம். கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் , அருகே ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மனைவி சித்ரா வயது 52. இவரும் இவரது மகன் பிரசாத் வயது 35 ஆகிய இருவரும் ஜூன் 15ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் மணப்பாறையில் இருந்து கரூர் செல்லும் சாலையில் டூ வீலரில் சென்றனர். இவர்களது வாகனம் லிங்கத்தூர் நால்ரோடு அருகே வந்தபோது , திண்டுக்கல் மாவட்டம் , குஜிலியம்பாறை , தனியார் காட்டன் மில் பகுதியைச் சேர்ந்த பாண்டியனின் மகன் 16-வயது உடைய சிறுவன் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் , பிரசாத் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பிரசாத்தின் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த அவரது தாயார் சித்ராவுக்கு பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சித்ரா அளித்த புகாரில் விபத்து ஏற்படும் வகையில் டூ வீலரை ஓட்டிய சிறுவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியனை காவல்துறையினர்.