காவேரிப்பட்டணம் அருகே டூவீலர் மோதி முதியவர் உயிரிழப்பு.
காவேரிப்பட்டணம் அருகே டூவீலர் மோதி முதியவர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருகே உள்ள சின்னமட்டாரப்பள்ளி சாமுண்டீஸ்வரி கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன் (60) கூலித்தொழிலாளியான. இவர் காவேரிப்பட்டணம் - தர்மபுரி சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற டூவீலர் முருகன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் முருகன் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.