திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அருவி பகுதியில் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற குப்பைகள் மற்றும் துணிகளை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது . இதில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.