நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்

நடுரோட்டில் பஸ் நின்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது;

Update: 2025-06-18 02:57 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட மலைக் கோட்டை பணிமனையில் உள்ள அரசு டவுன் பஸ் ஒன்று திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தி லிருந்து திருச்சி ஜங்ஷன் வழியாக கீழகல் கண்டார்கோட்டை வரை சென்று வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் இந்த பஸ் சத்திரத்தில் இருந்து ஜங் ஷன் நோக்கி வந்தது. மாநகராட்சி அலுவலகம் அருகே ஒத்தக்கடை பஸ்நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்லும் போது, திடீ ரென பழுது ஏற்பட்டு நடுரோட்டில் நின்றது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் சத்தம் மட்டுமே வந்தது. ஆனால் பஸ் நகரவில்லை. இத னால் பஸ்சில் இருந்த பயணிகள் அவதி அடைந்தனர். அவர்கள் இறக் கிவிடப்பட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். நடுரோட்டில் பஸ் நின்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் பணிமனையில் இருந்து மெக்கானிக் வந்து பழுதை நீக்கினார். இதைத்தொடர்ந்து அந்த பஸ்சை டிரைவர் அங்கிருந்து எடுத்துச்சென்றார்.

Similar News