கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

விழா;

Update: 2025-06-18 03:47 GMT
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் 2025 - 26ம் ஆண்டுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லுாரியில் இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழாவில், கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.நிகழ்ச்சியை மேரி போர்ஷியா தொகுத்து வழங்கினார். கல்லுாரி பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.

Similar News